டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

வேட்பாளர் ஒப்புதல் படிவம்!

அதிமுக வேட்பாளர் தேர்வுக்கான ஒப்புதல் படிவத்தை இன்று (பிப்ரவரி 5) இரவு 7 மணிக்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்ப வேண்டும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.

மோடி ஆவணப்படம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிபிசி வெளியிட்ட மோடி ஆவணப்படம் இன்று சென்னை அம்பேத்கர் திடலில் திரையிடப்படுகிறது.

தைப்பூச திருவிழா!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.

வாணி ஜெயராம் உடல் அடக்கம்!

சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

வசந்த முல்லை டிரைலர்!

ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்த வசந்த முல்லை படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

சமுதாய பாதுகாப்பு மாநாடு!

திருச்சியில் இன்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.

தெப்ப உற்சவம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் தெப்ப உற்சவம் இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 260-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி!

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான், பெங்களூரு எப்.சி அணிகள் மோதுகின்றன.

டாஸ்மாக் கடைகள் மூடல்!

வடலூர் ராமலிங்கம் அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.

நெரிசலில் சிக்கி பலியான பெண்கள்: நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

டெல்டாவில் பயிர்கள் சேதம்: அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0