முதல்வரின் தென்காசி பயணம்!
முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 8) தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினார்.
இமாச்சல், குஜராத் தேர்தல் முடிவு!
182 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. 27 ஆண்டு கால ஆட்சியை பாஜக தக்க வைத்துக்கொள்ளுமா, அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுபோன்று இமாச்சலப் பிரதேசத்திலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாஜக கூட்டம்!
பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு, நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது.
மாண்டஸ் புயல்!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றது. இதனால், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின் இணைப்பு – ஆதார் வழக்கு
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சொல் பாடல் ரிலீஸ்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற சொல் பாடல் வீடியோ இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 201-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், பெட்ரோல் ஒரு லிட்டர் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜல்லிக்கட்டு வழக்கு!
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பீட்டா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்றும் விசாரணைக்கு வருகிறது.
கலைத்திருவிழாவில் கலந்துகொள்ளும் ஆளுநர்!
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் பிரம்ம கான சபாவின் 21-ஆம் ஆண்டு டிசம்பர் கலைத்திருவிழாவில் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்கிறார்.
குளிர்கால கூட்டத்தொடர்!
பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடுகிறது.
இஎம்ஐ வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்பிஐ
புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வர் திறப்பு!