ஜி 20 மாநாடு கூட்டம்!
இந்தியா தலைமை ஏற்றுள்ள ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல்!
குஜராத்தில் 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா நினைவு தினம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தீபத் திருவிழா சிறப்பு ரயில்கள்!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு!
மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி அருகே கனியமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று திறக்கப்படுகிறது.
இந்தி திணிப்பு போராட்டம்!
இந்தி திணிப்பை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மே 17 இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
விஜய் – லோகேஷ் இணையும் புதிய படம்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் விஜய் கூட்டணி இணையும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 198-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தல் பத்திரம்!
05.12.2022 முதல் 12.12.2022 வரை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளது.
ஜி20 கூட்டம் : எடப்பாடிக்கு அழைப்பு!
என்.எல்.சி. சுரங்கமா? குத்தாட்ட அரங்கமா? வடநாட்டு அதிகாரிகளின் அடாவடி!