அமமுக ஆலோசனை கூட்டம்!
அமமுக மதுரை மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, தலைமை அலுவலகத்தில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று (டிசம்பர் 29) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
பவானி சாகர் அணை திறப்பு!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
திருப்பதி இலவச டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியாகிறது.
சிறப்பு ரயில் முன்பதிவு!
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
நலத்திட்ட உதவிகள்!
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லி விமான நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
ஜெய்சங்கர் வெளிநாடு பயணம்!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சைப்ரஸ் குடியரசு மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு இன்று முதல் வருகிற ஜனவரி 3-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கூட்டம்!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கேஎஸ் அழகிரி தலைமையில் நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 221-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியீடு!
பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்!