டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

டிடிவி தினகரன் ஆலோசனை!

தேனி மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (டிசம்பர் 28) ஆலோசனை நடத்துகிறார்.

திமுக அனைத்து அணிகள் கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது

பொன்னியின் செல்வன் அப்டேட்!

பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு  இரண்டாம் பாகம் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், இன்று  படத்தின் லுக் அவுட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசில் கரும்பு வழக்கு!
பொங்கல் பரிசில் கரும்பு வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மார்கழியில் மக்களிசை!

சென்னை சேத்துப்பட்டில் இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை 2022’ இன்று  தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கல் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுவையில் பந்த்! 

புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டி அ.தி.மு.க. சார்பில் இன்று பந்த் நடைபெற உள்ளது
டி.என்.பி.எல்.  பதிவு!

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில்  பங்கேற்க விரும்பும் தமிழக வீரர்கள் இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்யலாம் என டி.என்.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 221-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பரவல்!

தமிழகத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 55 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தத்துவத்தில் இறங்கிய தனுஷ் சகோதரர்!

திருவையாறில் புறவழிச்சாலை தேவையில்லை: சீமான்


.

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.