கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஐபிஎல் மினி ஏலம்!
ஐபிஎல் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கிறிஸ்துமஸ் சிறப்பு பேருந்துகள்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இன்று 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புத்தக திருவிழா!
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை ‘புத்தியைத் தீட்டுவோம்’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
நாட்டிய திருவிழா!
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இன்று நாட்டிய திருவிழா நடைபெறுகிறது. கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகில் திறந்தவெளி மேடையில் இந்த நாட்டிய விழா மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 20 நாட்கள் இவ்விழா நடைபெறும்.
கமல் டெல்லி பயணம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள்
ஒட்டன்சத்திரம் அருகே கின்னஸ் சாதனைக்காக, 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 215-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்க்குடிமகன் டீசர்!
சேரன் நடித்துள்ள தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
குரூப் 2 பயிற்சி காணொளி!
குருப்-2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி காணொலியை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி AIM TN என்ற யூடியூப் தளத்தில் இன்று வெளியிடுகிறது.
விடுதலையான ’பிகினி கில்லர்’ யார் இந்த சார்லஸ் சோப்ராஜ்
பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர்: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம்!