நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதம்!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 9) இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
அண்ணாமலை நடைபயணம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று 13-ஆவது நாளாக என் மண் என் மக்கள் நடைபயணத்தை திருச்சுழி முதல் அருப்புக்கோட்டை வரை மேற்கொள்கிறார்.
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு!
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
ஆடிக்கிருத்திகை விடுமுறை!
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அடி ஆத்தி பாடல் வெளியீடு!
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பரம்பொருள் படத்தில் இடம்பெற்ற அடி ஆத்தி பாடல் இன்று வெளியாகிறது.
ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது .
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 443-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ர்ரொல் ரூ102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிங் ஆஃப் கோதா டீசர் ரிலீஸ்!
அபிலேஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
இந்தியா, பாகிஸ்தான் மோதல்!
ஆசிய ஹாக்கி கோப்பை போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று இயல்பை விட 38-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராகுல்காந்திக்கு மீண்டும் அரசு இல்லம் ஒதுக்கீடு!