குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி!
சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா மற்றும் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 6) கலந்து கொள்கிறார்.
மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அமமுக பொதுக்குழு!
அமமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது.
மாரத்தான் போட்டி!
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் இன்று 73,206 பேர் பங்கேற்கும் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
மூன்று முகம், சிவாஜி ரீ ரிலிஸ்!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ரிலீசை கொண்டாடும் விதமாக சென்னை கமலா திரையரங்கில் டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட மூன்று முகம், சிவாஜி படங்கள் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதல்!
இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணிகள் போதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 442-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவ படிப்புகள் இட ஒதுக்கீடு!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் நடந்த கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெற்றவர்கள் விவரம் இன்று வெளியிடப்படுகிறது.
இந்தியா, மலேசியா மோதல்!
சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று இயல்பை விட 38-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவிரி நீர்…விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டம்: எடப்பாடி பழனிசாமி
நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3!
அமைச்சரிடம் சீறிய ஸ்டாலின் : மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?