குடியரசு தலைவர் தமிழகம் வருகை!
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.
அண்ணாமலை நடைபயணம்!
பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணம் இன்று 9-ஆவது நாளாக மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து மதுரை தெற்கு தொகுதி வரை நடைபயணம் செய்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்!
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இரண்டாம் கட்ட விண்ணப்பபதிவு முகாம்கள் இன்று முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வழக்கறிஞர்கள் அணி கூட்டம்!
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ரத்தமாரே பாடல் வெளியீடு!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடல் லிரிக் வீடியோ இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 441-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று 38-40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கங்கனா ரனாவத் கதாபாத்திரம்!
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கங்கனா ரனாவத் கதாபாத்திர தோற்றம் இன்று வெளியாகிறது.
ஹங்கேரி, குரோஷியா மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஹங்கேரி, குரோஷியா அணிகள் மோதுகின்றன.
பருவ மழைக்கு முன்பாக திட்டப் பணிகளை முடிக்க உத்தரவு!
27 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் : சென்னை வரும் அஸ்ரா கார்க்
அக்டோபர் வரை தப்பிக்கும் ஓ.பி.ஆர். எம்பி.பதவி: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?