top ten news august 26 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பிரதமர் மோடி இந்தியா வருகை!

தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாட்டு பயணங்களை முடித்துவிட்டு இன்று (ஆகஸ்ட் 26) இந்தியா திரும்பும் பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று சந்திரயான் 3 திட்டம் குறித்து விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.

திரு.வி‌.க. பிறந்தநாள்!

திரு.வி.கலியாணசுந்தரனார் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக அரசு சார்பில் மதுரவாயல் துண்டலம் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

மருத்துவ அணி ஆலோசனை கூட்டம்!

திமுக மருத்துவ அணி ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு முகாம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் துவங்கி வைக்கிறார்.

ஐடி விங் ஆலோசனை கூட்டம்!

விஜய் மக்கள் இயக்கம் ஐடி விங் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் இன்று நடைபெறுகிறது.

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி!

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா இன்று விளையாட உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 462-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மோதல்!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: கார்ன் சாலட்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு இ சேவை மையத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *