விக்ரம் லேண்டர் தரையிறக்கம்!
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கிறது. விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 14 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தில் ஆய்வு செய்வதற்காகவும், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்து வைப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு நான்கு நாட்கள் பயணமாக இன்று செல்கிறார்.
இந்திய தண்டனை சட்டம் ஆலோசனை!
இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாக்கள் குறித்து இன்று முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்துகிறது.
திமுக ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கிங் ஆஃப் கோதா ரிலீஸ்!
அபிலாஷி ஜோஷிலி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த கிங் ஆஃப் கோதா திரைப்படம் இன்று வெளியாகிறது.
செஸ் உலக கோப்பை இறுதிப்போட்டி!
பிரக்ஞானந்தா, கார்ல்சன் இடையேயான செஸ் உலக கோப்பையின் இரண்டாவது சுற்றும் சமனில் முடிந்ததால் இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 460-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் துவங்குகிறது.
வானிலை நிலவரம்!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஹாக்கி போட்டி!
சென்னை எழும்பூரில் அகில இந்திய எம்.சி.சி முருகப்பா தங்ககோப்பை ஹாக்கி போட்டி இன்று முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதிமுக மாநாடு: சுங்கச்சாவடிக்கு ரூ.20 கோடி இழப்பு!
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை