காவிரி நீர் வழக்கு விசாரணை!
தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு வலியுறுத்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 25) விசாரணைக்கு வருகிறது.
காலை உணவு திட்டம் விரிவாக்கம்!
தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசுப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் துவங்கி வைக்கிறார்.
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
விஜயகாந்த் தொண்டர்கள் சந்திப்பு!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்.
நாம் தமிழர் பொதுக்கூட்டம்!
திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பேசுகிறார்.
Boss&Co திரைப்படம் ரிலீஸ்!
ஹனீப் அதேனி இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள Boss & Co திரைப்படம் இன்று வெளியாகிறது.
நகரோடி ஆவண திரைப்படம்!
திவ்யா ஜெஸி இயக்கிய நகரோடி ஆவண திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் சென்னை எழும்பூர் நீலம் புக்ஸில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 461-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102..6-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா!
வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜேப்பியார் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.