சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குகிறது!
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குகிறது.
அனைத்து கட்சி கூட்டம்!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்ய கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கு!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் பொறுப்பேற்பு!
தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா இன்று பொறுப்பேற்கிறார்.
சேலம் திமுக அலுவலகம் திறப்பு!
சேலத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைக்கிறார்.
சதுரங்க போட்டி இறுதி சுற்று!
கார்ல்சன், பிரக்ஞானந்தா இடையேயான உலக கோப்பை சதுரங்க ஆட்டத்தில் இறுதி போட்டியின் முதல் சுற்று சமனில் முடிந்தது. இன்று இரண்டாவது சுற்று போட்டி நடைபெறுகிறது.
அயர்லாந்து, இந்தியா மோதல்!
அயர்லாந்து, இந்தியா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 459-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாஜக இலவச மருத்துவ முகாம்!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
வானிலை நிலவரம்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பட்டினப்பாக்கம் மீன் அங்காடி: கடைகள் ஒதுக்கும் பணி தீவிரம்!
கிச்சன் கீர்த்தனா: தினை – பச்சைப்பயறு ஊத்தப்பம்