எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் சந்திப்பு!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று (ஆகஸ்ட் 2) சந்திக்க உள்ளனர்.
செந்தில் பாலாஜி வழக்கு!
ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு!
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நான் முதல்வன் திட்டம்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
ஜெயிலர் Showcase வெளியீடு!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் Showcase இன்று வெளியாகிறது.
மீனவர்களுடன் ஆலோசனை!
வட சென்னை அனல் மின் நிலையத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மீனவர்களுடன் இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.
கார்டியன் ஆஃப் தி கேலக்ஸ் 3 திரைப்படம்!
மார்வெல் நிறுவனத்தின் கார்டியன் ஆஃப் தி கேலக்ஸ் 3 திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 438-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து!
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9.45 மணிக்கு திருச்சி ஜங்ஷன் – கரூர் செல்லும் முன்பதிவில்லா விரைவு ரயிலும் மதியம் 3.55 மணிக்கு கரூரிலிருந்து திருச்சி வரும் முன்பதிவில்லா ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிச்சன் கீர்த்தனா: 7 ஸ்டார் தோசை
மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்: ஸ்டாலின் கடிதம்!