டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Jegadeesh

top ten news august 19

திமுக ஆலோசனைக் கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கலைஞர் உரிமைத் தொகை

கலைஞர் உரிமைத்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம்  இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

ரோப்கார் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோயிலில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்டார்ட்‌ அப் திருவிழா

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில்‌ இன்று ’தமிழ்நாடு ஸ்டார்ட்‌ அப்’‌ திருவிழா நடைபெறுகிறது.

அதிமுக மாநாடு-சிறப்பு ரயில்

மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு செல்வதற்காக சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரயில் இன்று சென்னையில் இருந்து மதுரை புறப்படுகிறது.

அண்ணாமலை நடைபயணம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பாளையங்கோட்டையில் இருந்து அம்பாசமுத்திரம் வரை ‘என் மண் என் மக்கள் நடைபயணம்’  மேற்கொள்கிறார்.

உ.பி முதல்வருடன் ஜெயிலர் படம் பார்க்கும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதல்வருடன் இன்று ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப்

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இன்று தொடங்குகிறது

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 455-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

“வண்டிய ஓரமா நிறுத்த மாட்டியா?” – வியாபாரியை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய சவுத் பஞ்சாயத்து!