சுதந்திர தின விழா!
நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசிய கொடியேற்றுகின்றனர்.
தேநீர் விருந்து ஒத்திவைப்பு!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறவிருந்த தேநீர் விருந்து மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பவானி சாகர் அணை திறப்பு!
ஈரோடு பவானி சாகர் அணையிலிருந்து இன்று கீழ் பவானி பிரதான கால்வாயில் முதல்போக நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அண்ணாமலை நடைபயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று 19-வது நாளாக என் மண் என் மக்கள் நடைபயணம் கிள்ளியூர் முதல் விளவங்கோடு வரை மேற்கொள்கிறார்.
கிராம சபை கூட்டம்!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் இன்று நடத்தப்படுகிறது.
ஹே ராம் திரைப்படம் ரிலீஸ்!
நடிகர் கமல் ஹாசன் இயக்கத்தில் உருவாகி 2000-ஆம் ஆண்டு வெளியான ஹே ராம் திரைப்படம் இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் யூடியூப் பக்கத்தில் வெளியாகிறது.
ஜெர்மனி, குர்ன்ஸே அணிகள் மோதல்!
ஐசிசி டி 20 கிரிக்கெட் போட்டியில் இன்று ஜெர்மனி, குர்ன்ஸே அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 451-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புச்சிபாபு கிரிக்கெட்!
12 அணிகள் கலந்து கொள்ளும் புச்சிபாபு அகில இந்திய கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது.
வானிலை நிலவரம்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிச்சன் கீர்த்தனா: காராமணி ராகி சேவை
சென்னை மழை: வெள்ளத்தில் மூழ்கிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!
சீதா ராமம் திரைப்படத்திற்கு சர்வதேச விருது!