திருப்பதி சிறுவர்களுக்கு அனுமதி ரத்து!
சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக திருப்பதி மலைப்பாதையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் நடந்து செல்ல இன்று (ஆகஸ்ட் 14) முதல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கி கடன் வழங்கும் விழா!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கி கடன், பணி நியமன ஆணைகளை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
அண்ணாமலை நடைபயணம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று 17-வது நாளாக என் மண் என் மக்கள் நடைபயணம் திருச்செந்தூரில் மேற்கொள்கிறார்.
சென்னையில் பள்ளிகள் இயங்கும்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அலைச்சறுக்கு போட்டி!
மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை அலைச்சறுக்கு போட்டி நடைபெற உள்ளது.
தமிழ்க்குடிமகன் டீசர் ரிலீஸ்!
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிக்கும் தமிழ்க்குடிமகன் டீசர் இன்று வெளியாகிறது.
ஜவான் பாடல் வெளியீடு!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் இரண்டாவது பாடல் ஹையோடா இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 450-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வருண் தேஜ் புதிய படம்!
சக்தி பிரதாப் சிங் ஹடா இயக்கத்தில் வருண் தேஜ் நடிக்கும் படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.