வீடுகளில் தேசியக்கொடி!
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அன்பில் மகேஷ் உடல்நிலை!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திரவ ஆகாரங்களும், வலி நிவாரணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது உடல்நிலை திடமாக உள்ளது என்று பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை நேற்று இரவு செய்தி குறிப்பு வெளியிட்டது. இன்று பிற்பகல் அவர் சென்னை வருவதாக தகவல்கள் வருகின்றன.
அண்ணாமலை நடைபயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணம் இன்று 16-வது நாளாக தூத்துக்குடி முதல் ஸ்ரீவைகுண்டம் வரை நடைபெறுகிறது.
விஜய் மக்கள் இயக்கம் நலத்திட்ட உதவி!
கோவை தெற்கு மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 12 இடங்களில் இன்று விலையில்லா முட்டை, ரொட்டி, பால் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 449-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடிக்கல் நாட்டு விழாவில் ராகுல்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோடஞ்சேரியில் சமூக ஊனமுற்றோர் மேலாண்மை மையத்திற்கு ராகுல் காந்தி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அமெரிக்கா, இத்தாலி மோதல்!
நேஷனல் பேங்க் ஓபன் ஆடவருக்கான ஒற்றையர் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த டாமி பால் மற்றும் இத்தாலியை சேர்ந்த ஜன்னிக் சின்னர் இன்று மோதுகின்றனர்.
சென்னை கடற்கரையில் மீன் பிடிக்கத் தடை!
சென்னை கடற்கரை பகுதியில் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை உதவி இயக்குனர் எழுதியுள்ள கடிதத்தில், “பாதுகாப்பு காரணங்கள் கருதி, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசன்ட் நகர் வரை கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 5 ஆவது டி20 இன்று!
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில்… தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.
ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது உண்மை: தமிழிசை சவுந்தரராஜன்
தகுதி நீக்கம் செய்தாலும் வயநாட்டுடனான உறவு முறியாது: ராகுல் காந்தி