பழங்குடி மக்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு!
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களோடு கலந்துரையாடுகிறார்.
நாங்குநேரி சம்பவம்!
நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை சபாநாயகர் அப்பாவு மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.
பனை தேசிய திருவிழா!
திருநெல்வேலி தருவை பனங்காடு பகுதியில் பனை தேசிய திருவிழா நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொள்கிறார்.
கேரளம் படகு போட்டி!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இன்று 69-வது நேரு கோப்பை படகு போட்டி நடைபெற உள்ளது.
அண்ணாமலை நடைபயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணம் இன்று 16-வது நாளாக விளாத்திக்குளம் முதல் ஓட்டப்பிடாரம் வரை நடைபெறுகிறது.
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறுகிறது.
சதுரகிரி பக்தர்களுக்கு அனுமதி!
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதல்!
இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 448-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
குட்கா முறைகேடு: 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி!