மஞ்சள் நிற பேருந்துகள்!
புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 11) துவக்கி வைக்கிறார்.
அண்ணாமலை நடைபயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணம் இன்று 15-ஆவது நாளாக சாத்தூர் முதல் கோவில்பட்டி வரை நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை கூட்டம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
கம்பன் விழா!
சென்னை கம்பன் கழகம் சார்பில் 49-வது கம்பன் விழா மயிலாப்பூரில் இன்று முதல் ஆகஸ்ட் 13-வரை நடைபெறுகிறது.
கலைஞர் சிலை திறப்பு!
குன்றத்தூர் பெரிய பணிச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
பேருந்துகள் இயக்கம்!
வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று 1,100 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் என்.ஏ.ஏ.சி அங்கீகாரம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்.ஏ.ஏ.சி அங்கீகாரம் வழங்குவதற்கான குழு இன்று ஆய்வு செய்கிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 447-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்தியா, ஜப்பான் மோதல்!
ஆசிய ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் இன்று மோதுகின்றன.