டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news august 10 2023

நம்பிக்கையில்லா தீர்மானம்!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) பேசுகிறார்.

அன்பழகன் சிலை திறப்பு!

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்பழகன் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

அண்ணாமலை நடைபயணம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று 14-வது நாளாக என் மண் என் மக்கள் நடைபயணம் விருதுநகர் முதல் சிவகாசி வரை மேற்கொள்கிறார்.

குரூப் 1 தேர்வு!

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வு நடைபெறுகிறது.

ஜெயிலர் ரிலீஸ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

நிறை புத்தரிசி விழா!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி விழா இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 446-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக சிங்கங்கள் தினம்!

உலகம் முழுவதும் உள்ள சிங்கங்களின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா, டென்மார்க் மோதல்!

இன்றைய நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கிரோன், டென்மார்க்கை சேர்ந்த ரூன் மோதுகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: சென்னா ரைஸ்

முதன்மை கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள்: பட்டியலிட்ட முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel