அனைத்துக் கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், இன்று (டிசம்பர் 6) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு!
ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வானிலை நிலவரம்!
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அமமுக ஆலோசனை கூட்டம்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று சென்னையில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை தீபம்!
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 199-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கால்பந்து போட்டி!
கத்தாரில் இன்று நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் மோராக்கா, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
விஷால் ரசிகர்கள் சந்திப்பு!
சென்னையில் உள்ள ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரியில் நடிகர் விஷால் தனது ரசிகர்களை இன்று சந்திக்க உள்ளார்.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இமாச்சல், குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?
குஜராத் தேர்தல்: இரண்டாம் கட்டத்திலும் அதிர்ச்சி!