டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

குஜராத்தில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ( மே 12) தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்று காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதானி – ஹிண்டன்பர்க் விசாரணை!

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

செவிலியர் தினம் இன்று!

நோயாளிகளுக்கு அக்கறையுடன் சிகிச்சை அளித்து, டாக்டர்களுக்கு பக்கபலமாக பணியாற்றும் செவிலியர்களின் சவாலான பணியை அங்கீகரிக்கும் விதமாக இன்று ’உலக செவிலியர் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

37 நாடுகளில் கேரளா ஸ்டோரி ரிலீஸ்!

கடந்த வாரம் நாடு முழுவதும் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இன்று உலகம் முழுவதும் 37க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது.

சென்னை – கொல்கத்தா: டிக்கெட் விற்பனை!

மே 14 ஆம் தேதி நடக்கும் சென்னை – கொல்கத்தா ஐபிஎல் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு சேப்பாக்கத்தில் தொடங்குகிறது.

மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்!

பிளஸ்-2 தேர்வு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக இன்று முதல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 356வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டி!

இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

இன்று வெளியாகும் திரைப்படங்கள்!

திரையரங்குகளில் இன்று வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’, சாந்தனுவின் ‘ராவண கோட்டம்’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’, மணிகண்டனின் ‘குட் நைட்’ உள்ளிட்ட தமிழ் படங்கள் வெளியாகின்றன.

கிச்சன் கீர்த்தனா: தேங்காய் டிலைட்

RR vs KKR: ஜெய்ஸ்வால் அதிரடி சாதனைகள்… ராஜஸ்தான் அபார வெற்றி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *