ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!
சென்னையில் மொத்தம் 82 நியாய விலைக் கடைகளில் இன்று (ஜூலை 4) முதல் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
செந்தில்பாலாஜி வழக்கில் தீர்ப்பு!
செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளனர்.
வீடு திரும்புகிறார் முதல்வர்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் மு.க .ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வீடு திரும்புகிறார்.
ஷாங்காய் உச்சி மாநாடு தொடக்கம்
ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் அதிபர்கள் கலந்துகொள்ளும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை இந்தியா சார்பில் பிரதமர் மோடி இன்று தலைமையேற்று தொடங்கி வைக்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று 409வது நாளாக விலையில் எந்த மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
நேரடி மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இடுக்கியில் ரெட் அலர்ட்!
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இன்று அதி தீவிர கன மழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
டிஎன்பிஎல் பரபர போட்டி!
திருப்பூர் தமிழனுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் டின்பிஎல் மதுரை பேந்தர்ஸ் அணி களம் இறங்குகிறது.
பத்து மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜெயந்த்பாட்டீல் நீக்கம்
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் நீக்கப்பட்டு, புதிய தலைவராக சுனில் தட்கரே நியமிக்கப்பட்டுள்ளதாக அஜித் பவார் அணியினர் அறிவித்துள்ளனர்.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் : வரலாறு படைக்குமா இந்தியா?