டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

முதல்வர் – துரைமுருகன் சந்திப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று (ஜுலை 3) காலை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.

தக்காளி விலை – அமைச்சர் ஆலோசனை

தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கர்நாடகாவில் ஜனாதிபதி

கர்நாடகா சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

இன்று முதல் கல்லூரி தொடக்கம்

தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கவுள்ளன.

குரு பூர்ணிமா கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி இன்று குரு பூர்ணிமா கருட சேவை நடக்கிறது.

நான்கு நாட்களுக்கு மழை

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று 408ஆவது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஓடிடியில் ’குட்நைட்’

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குட் நைட் திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகிறது.

ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படத்தின் முதல் சிங்கில் பாடலுக்கான ப்ரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ்

டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கிச்சன் கீர்த்தனா: வரகு – பச்சைப் பயறு உப்புமா

டிசம்பரிலேயே மக்களவைத் தேர்தல்: டி.ஆர்.பாலு அலாரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *