டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

உரிமை தொகை : கள ஆய்வு தொடக்கம்!

அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்திற்கான கள ஆய்வுப் பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க இன்று  அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 424வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

செயற்கை நுண்ணறிவு : ஐ.நா முதல் கூட்டம்!

செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க் நகரில் இன்று  நடைபெற உள்ளது.

ஜோகன்ஸ்பர்க்கில் சர்வதேச கூட்டம்!

இந்தியா, ரஷ்யா நாடுகள் கலந்து கொள்ளும் பிரிக்ஸ் சந்திப்பை முன்னிட்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் இன்று சர்வதேச கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அடுத்த 6 நாட்களுக்கு மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நான்கு நாட்களுக்கு விடுமுறை!

இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு குவைத் நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரம் 2வது சிங்கிள்!

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி!

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

IND vs BAN 2வது ஒருநாள் போட்டி

இந்தியா- வங்காளதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு டாக்காவில் நடைபெற உள்ளது.

கிச்சன் கீர்த்தனா: காரப்புட்டு

டிஜிட்டல் திண்ணை:  ’அப்பவே சொன்னேன்…’ பொன்முடி விவகாரத்தில் ஸ்டாலின் டென்ஷன்!  செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதம்! 

+1
0
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *