ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை தொடக்கம்!
”சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற 7-வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை தொடர் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆடிப்பெருக்கு தினம்!
ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை என பல விசேஷ நாட்களை கொண்ட இந்த ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான ஆடி பதினெட்டு ஆடிப்பெருக்கு தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.
5 மாவட்டங்களுக்கு விடுமுறை!
சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் மற்றும் ஆடிபெருக்கை முன்னிட்டு இன்று ஈரோடு, சேலம், திருப்பூர் திருச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா தாக்கல்!
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
என்எல்சி அதிபர் இல்லம் நோக்கி பேரணி!
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று என்எல்சி அதிபர் இல்லம் நோக்கி பேரணி போராட்டம் நடத்த உள்ளனர்.
பத்திரப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்!
தமிழகத்தில் இன்று ஆடி பெருக்கு நாள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
முதல் 20 ஓவர் போட்டி!
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
தமிழ்நாட்டில் இன்று 439வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
மருத்துவ சீட்: இன்றே கடைசி நாள்!
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்வதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்.
ரிச்சர்ட் ஆர்க்ரைட் நினைவுதினம்!
ஜவுளித்துறை புரட்சியின் முன்னோடியாக கருதப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆர்க்ரைட் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா: கீரை வெஜ் ஆம்லெட்
சிறப்பு விசாரணை குழு வேண்டும்: சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!