திலகர் விருது பெறும் மோடி
புனேயில் இந்த ஆண்டுக்கான ‘லோக்மான்ய திலக் தேசிய விருது’ பிரதமர் மோடிக்கு இன்று (ஆகஸ்ட் 1) வழங்கப்பட உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!
சாமானிய மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் சந்திரயான்-3!
புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, இன்று நள்ளிரவு 12 – 1 மணிக்குள் நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் பயணிக்கத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்ட அ.தி.மு.க கூட்டம்!
மதுரை மாநாடு தொடர்பாக திருச்சி மாவட்ட அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ்.மஹாலில் நடைபெறுகிறது.
ஆசிரியர் சங்கம் – பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை!
பள்ளிக்கல்வித் துறை, ஆசிரியர் சங்கங்கள் இடையேயான 3-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.
பன்னீர் – டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம்!
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் திமுக அரசு விசாரணையை தீவிர படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.
15 திமுகவினர் மீது தீர்ப்பு!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்ட 15 திமுகவினர் மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும்!
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
டாஸ்மாக் மூடல்!
கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் திருவிழாவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடப்படுகிறது.
கடைசி ஒரு நாள் போட்டி!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 437வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.