டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

Published On:

| By Selvam

விடுதி கட்டிடங்கள் திறப்பு!

மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி மற்றும் நூலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 21) திறந்து வைக்கிறார்.

10,500 சிறப்பு பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இன்று முதல் தமிழகம் முழுவதும் 10,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பிரின்ஸ், சர்தார் ரிலீஸ்!

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் மற்றும் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் இன்று வெளியாகிறது.

திருப்பதி கோவில் ஆன்லைன் டிக்கெட்!

நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணியளவில் துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 153-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ‌.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7 காட்சிகளுக்கு அனுமதி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இன்று முதல் அக்டோபர் 27-ஆம் தேதி வரை 7 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டி!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

பள்ளிகளுக்கு விடுமுறை!

கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 235 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனைகளில் 3692 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை – கோவா அணிகள் மோதல்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று சென்னை எப்.சி மற்றும் கோவா அணிகள் மோதுகின்றன.

வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

“வீண்பழி சுமத்துகிறார்கள்” : சசிகலா வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel