டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (டிசம்பர் 19) மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

ரோப் கார் சேவை ரத்து!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று ரோப் கார் சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம் பேரணி!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட கிராம மக்கள் சார்பாக இன்று ஏகனாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது.

வால்டர் வீரய்யா இரண்டாவது பாடல்!

கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.

அன்பழகன் கல்வி வளாகம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் விழாவில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவினை திறந்து வைத்து, டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் எனப் பெயர் சூட்டுகிறார்.

விசுவ ஹிந்து பரிஷத் போராட்டம்!

முருகப்பெருமானின் ரத யாத்திரையை தமிழக அரசு தடை செய்ததைக் கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வானிலை நிலவரம்!

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 212-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நம்ம ஸ்கூல் திட்டம்!

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

எல்லையில் சீன ஆக்கிரமிப்பு:  சீனப் பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதிப்பது ஏன்? – அரவிந்த் கெஜ்ரிவால்

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ஸ்பிரிங் ரோல்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *