டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

விஜய் நிர்வாகிகள் சந்திப்பு!

விஜய் மக்கள் இயக்கத்தின் மூன்று மாவட்ட நிர்வாகிகளை, நடிகர் விஜய் இன்று (நவம்பர் 20) பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திக்கிறார்.

காவிரி பாலம் போக்குவரத்து தடை!

திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆர்ப்பாட்டம்!

டேன்டீ தேயிலை தொழிலாளர்கள் நலன் காக்க பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பிபா கால்பந்து!

இன்று கத்தாரில் துவங்கும் பிபா உலக கோப்பை கால்பந்து முதல் போட்டியில் கத்தார், ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

காங்கிரஸ் இலக்கிய அணி கூட்டம்!

காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடக்கிறது.

சர்வதேச திரைப்பட விழா!

53-வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் நவம்பர் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு!

பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வு இன்று துவங்க உள்ளது.

இந்தியா – நியூசிலாந்து மோதல்!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நியூசிலாந்தில் நடைபெற உள்ளது ‌‌.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 183-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்!

ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய அடுத்த நிறுவனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0