மருத்துவமனை திறந்து வைக்கிறார்!
திருவண்ணாமலையில் 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 22) திறந்து வைக்கிறார்.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!
மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம்!
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் இன்று மாலை தி.மு.க. சார்பில் நடைபெறும் வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
கே.எஸ்.அழகிரி பிறந்தநாள்!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இன்று கொண்டாடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
3 மாவட்டங்களுக்கு கனமழை!
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக உள்ள நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் மழை!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 519 ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து போட்டி!
உலகக்கோப்பை தொடரின் இன்றைய 21 லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தர்மஷாலா மைதானத்தில் மோதுகின்றன.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி!
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டன், ரஷ்யாவின் அஸ்லான் கரட்சேவை எதிர்கொள்கிறார்.
23 ரயில்கள் ரத்து!
சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இன்று 23 சென்னை புறநகர் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்?