டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

விஜயகாந்துக்குக்கு பத்மபூஷன் விருது!

டெல்லியில் இன்று (மே 9) நடைபெற இருக்கும் விழாவில் கலந்து கொண்டு மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்குக்கு வழங்கப்படும் பத்மபூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா பெற உள்ளார்.

8 மாவட்டங்களில் கனமழை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னாள் பாஜக எம்எல்ஏ இறுதிச்சடங்கு!

தென்னிந்தியாவின் முதல் பாஜ எம்எல்ஏ எனப்படும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ.  வேலாயுதன் இறுதிச்சடங்கு இன்று காலை நடைபெறுகிறது.

ஸ்விஃப்ட் கார் அறிமுகம்!

பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட் செய்யப்பட்ட மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மாலத்தீவு – இந்தியா பேச்சுவார்த்தை!

கருத்து வேறுபாடு சர்ச்சையை அடுத்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் மூசா ஜமீர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார்.

கல்லூரி கனவு நிகழ்ச்சி!

பெரம்பலூரில், மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியான ’கல்லூரி கனவு’ இன்று நடைபெறுகிறது.

சென்னை – ராஜஸ்தான் டிக்கெட் விற்பனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான போட்டியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

டி.ராஜேந்தர் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவை செதுக்கியதில் முக்கிய பங்காற்றிய கலைஞனாக இருந்து வரும் நடிகர் டி.ராஜேந்தரின் 69வது பிறந்தநாள் இன்று.

பெங்களூரு – பஞ்சாப் மோதல்!

தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணி எதிர்கொள்கிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 54வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாசிசம் வீழ்த்தப்பட்ட வெற்றி நாள்!

வேளாண், மீன்வளப் படிப்புகளில் சேருவது எப்படி? முழு விவரங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *