டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு!

தி.மு.க அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் டி.ஆர்.பி.ராஜா இன்று (மே 11) காலை பதவியேற்கிறார்.

யார் யாருக்கு என்ன இலாகா?

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களின் இலாகா குறித்த விபரம் இன்று வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு – ஹூண்டாய் ஒப்பந்தம்!

தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.15,000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

அரசியல் நெருக்கடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மஹாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

உத்தவ், பவாரை சந்திக்கும் நிதிஷ்குமார்

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆகியோரை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சந்தித்து பேச உள்ளார்.

வெளுக்க போகும் வெயில்!

வங்கக்கடலில் நேற்று உருவான ‘மோக்கா’ புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று வெளியாகாது!

10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என இணையத்தளத்தில் வெளியான தகவல் போலியானது என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டி!

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

பெட்ரோல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 355-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 க்கும், டீசல் ரூ.94.24 க்கும் விற்பனையாகிறது.

வாசனை திரவிய கண்காட்சி!

கோடை விழாவை முன்னிட்டு கூடலுாரில் மூன்று நாட்கள் நடைபெறும் வாசனை திரவிய கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைக்கிறார்.

கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் காக்டெய்ல்

“உதயச்சந்திரன் ஐஏஎஸ் மிரட்டல்” : ஜவகர்நேசன் விலகல்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *