டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

செந்தில்பாலாஜி வழக்கில் தீர்ப்பு!

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 16) தீர்ப்பளிக்க உள்ளது.

தி.நகர் ஆகாய மேம்பாலம் திறப்பு!

மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடை மேம்பாலத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

மரக்காணம் செல்கிறார் எடப்பாடி

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மரக்காணம் செல்ல உள்ளார்.

தொமுச பேரவை பொதுக்குழு – கொடியேற்றம்!

3 நாட்கள் நடைபெற உள்ள தொமுச பேரவையின் பொதுக்குழு இன்று சென்னை கலைவாணர் அரங்கில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

வெயில் அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெயில் சதம் கண்டு வரும் நிலையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் – இழுபறி!

கர்நாடக முதல்வர் குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்படாத நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வார் என்று அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இன்றே கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கு இன்று மாலைக்குள் சான்றிதழ்களை பதிவேற்றிவிட்டு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் பாடல் ரிலீஸ்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘இளையோர் சூடார்’ பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 360வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

இன்றைய ஐபிஎல் போட்டி!

லக்னோ வாஜ்பாயி மைதானத்தில் இன்று நடைபெறும் 63வது ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: சில்லி சப்ஜி

நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *