டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top 10 news today tamil

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆரம்பம்!

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 26) தொடங்குகிறது. இத்தேர்வினை மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள்.

பிரதமர் வீடு முற்றுகை!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

பம்பரம் சின்னம் வழக்கு!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சீமான் கேட்ட சின்னம் கிடைக்குமா?

நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு சீமான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,  அதுகுறித்து இன்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்!

தூத்துக்குடியில் இன்று நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக வேட்பாளர் கனிமொழிக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிக்க உள்ளார்.

கோடநாடு வழக்கில் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு சந்தோஷ் சாமியிடம் விசாரணை நடைபெறுகிறது.

சென்னை – குஜராத் மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இன்று இரவு 11:00 மணி முதல் அதிகாலை 01:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்!

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் இன்று மோத உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மேத்தி ரைஸ்

பஞ்சாப் ஜெர்ஸி போட்டுக்கொண்டு ‘பெங்களூருக்காக’ விளையாடிய… பட்டைய ‘கெளப்பும்’ மீம்ஸ்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel