எடப்பாடி பிரச்சாரம் ஆரம்பம்!
சேலம் பெரியசோரகை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து திருச்சியில் இன்று (மார்ச் 24) அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரையும் அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.
வேட்பாளர்களை அறிவிக்கிறது அமமுக!
பா.ஜ.க. கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
ஓட்டுப்பதிவு அலுவலர் பயிற்சி!
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மக்களவைத் தேர்தல் ஓட்டுப்பதிவு அலுவலருக்கான முதல் கட்ட பயிற்சி தொடங்குகிறது.
வறண்ட வானிலை நிலவக்கூடும்!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
’ஜீனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ஜெயம்ரவி, கீர்த்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ஃபேண்டசி திரைப்படமான ’ஜீனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மதியம் 2 மணியளவில் வெளியாகிறது.
ராஜஸ்தான் – லக்னோ, மும்பை – குஜராத் மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் லக்னோ – சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
பங்குனி உத்திரத் தேரோட்டம்!
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று (மார்ச் 24) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
அய்யப்பனுக்கு ஆராட்டு!
திருவனந்தபுரம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு இன்று பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.
குருத்தோலை ஞாயிறு!
கிறிஸ்தவர்களின் தவக்கால புனித வாரம் தொடக்கமாக, இன்று உலகம் முழுவதும் தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ஃபிரிட்ஜ்… எந்தப் பொருளை, எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்?