திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக, மமக மற்றும் தவாக ஆகிய கூட்டணி கட்சிகளுடன் திமுக இன்று (மார்ச் 2) பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை!
அதிமுக – தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரையிறுதியில் தமிழ்நாடு அணி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை – தமிழ்நாடு அணி இடையேயான அரையிறுதி போட்டியானது, மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
மத்தியபிரதேசத்தில் ராகுல் காந்தி
காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ இன்று மத்திய பிரதேசத்திற்குள் நுழைகிறது.
சாந்தனின் இறுதி சடங்கு!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த சாந்தனின் உடல் இலங்கையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த நாள்!
வயலின் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதனின் 89வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இன்றே கடைசி நாள்!
JEE Main 2வது செசன் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்ய இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
மும்பை – பெங்களூரு அணிகள் மோதல்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 651வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : குஜராத் ஹோலி லட்டு
அஞ்சு சால்வை…மூணு பொக்கே: அப்டேட் குமாரு