மும்பை செல்கிறார் ஸ்டாலின்
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார் 17) காலை மும்பை புறப்பட்டு செல்கின்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு, மாநிலக்குழு கூட்டம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
மின்சார ரயில் சேவைகள் ரத்து!
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 44 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவை!
சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில், மின்சார ரயில்கள் ரத்து காரணமாக, இன்று கூடுதலாக 150 மாநகர பேருந்துகளும், 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள்!
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், www.voters.eci.gov.in இணையதளத்திலும், ‘Voter Helpline’ மொபைல் ஆப்ஸ் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி?
சென்னையை அடுத்த நெம்மேலியில் உள்ள கடல்நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலையில், இன்று முதன்முறையாக அதன் உச்ச அளவான 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 3வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய். 100.75க்கும், டீசல் ரூபாய் 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெப்பநிலை அதிகரிக்கும்!
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
WPL இறுதிப்போட்டி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
அப்பு பிறந்தநாள்!
மறைந்த கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் அப்பு என்ற ரசிகர்களால் அழைக்கப்பட்ட புனித் ராஜ் குமாரின் 49வது பிறந்தநாள் இன்று!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… ஏர் ஃப்ரையர் சமையல் – நல்லதா? கெட்டதா?
தேர்தல் தேதி அக்கப்போரு: அப்டேட் குமாரு