இன்று பள்ளிகள் திறப்பு!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்படுகிறது.
மேட்டூரில் தண்ணீர் திறப்பு!
காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று மேட்டூரில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திரவுபதி முர்மு -நீலகிரி பழங்குடியினர் சந்திப்பு!
நாட்டின் குடியரசுத் தலைவரான திரவுபதி முர்முவை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 57 பழங்குடியின மக்கள் இன்று டெல்லியில் நேரில் சந்திக்க உள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்க முலாம் பூசும் பணி தொடக்கம்!
தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் உள்ள மாதா சுரூபத்திற்கு தங்க முலாம் பூசும் பணி இன்று தொடங்க உள்ளது.
மார்ஷல் நேசமணி பிறந்தநாள்!
குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 129 – வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
புறநகர் ரயில்கள் ரத்து!
பேசின் பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி!
சென்னையில் இன்று முதல் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன் தொடக்க விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
டி.என்.பி.எல் தொடர் தொடக்கம்!
டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் கோவையில் இன்று தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 387வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
25 சீட் சர்ச்சை : அமித்ஷா பேசியது என்ன?
“ஒன்றும் செய்யாததற்கு ஒப்புதல் வாக்குமூலம்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதில்!