திருச்சியில் மோடி top 10 news today Tamil January 2 2024
திருச்சியில் புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) தமிழ்நாடு வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் மனு விசாரணை!
கடந்த 2014ம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி முதல்வர் ஸ்டாலின் அப்போது தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பள்ளிகள் திறப்பு!
அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
பன்னீருக்கு அனுமதி!
திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலவச தரிசன டோக்கன் விநியோகம்!
டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் இன்று முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக அதிகாலை 4 மணி முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.
மிக கனமழைக்கு வாய்ப்பு!
நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!
தென்காசி மாவட்டத்தில் கனமழையால் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 591வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?
இந்திய மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது.
டெல்லி – குஜராத் மோதல்!
புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : தொடைக்கறிக் குழம்பு
2024 ஆரம்பமே சும்மா அதிருதடா: அப்டேட் குமாரு
top 10 news today Tamil January 2 2024