top 10 news today Tamil January 19 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பிரதமர் சென்னை வருகை! top 10 news today Tamil January 19 2024

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று (ஜனவரி 19) மாலை சென்னை வருகிறார்.

புதிய பேருந்துகள்!

சென்னை பல்லவன் இல்லத்தில் 100 புதிய பேருந்துகளின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.

உலகின் உயரமான அம்பேத்கர் சிலை!

விஜயவாடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் உயரமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் சிலையை ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார்.

பன்னீர் மனு விசாரணைக்கு!

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

இன்று முதல் முன்பதிவு!

முதல்வர் திறந்து வைக்கவுள்ள அலங்காநல்லூர் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில்” நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி!

மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் இன்று அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

U-19 உலகக்கோப்பை ஆரம்பம்!

15-வது 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று முதல் தொடங்குகிறது.

டிபி வேர்ல்டு சர்வதேச லீக்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இன்று முதல் தொடங்குகிறது.

தென்மாவட்டங்களில் மழை!

தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 608வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சேமியா கட்லெட்

கொடநாடு வந்தது ஏன்? – சசிகலா பேட்டி!

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை குறைக்க மோடி முயன்றாரா?

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

top 10 news today Tamil January 19 2024

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0