உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள 206 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (ஜனவரி 18) திறந்து வைக்கிறார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கார்னிவெல் விழாவை முன்னிட்டு இன்று காரைக்காலில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விடுமுறை அறிவித்துள்ளார்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று நடைபெறுகிறது.
தி.மு.க. இளைஞரணி மாநாடு சுடர் தொடர் ஓட்டம்!
சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
பழனியில் கடையடைப்பு!
பழனியில் வர்த்தகர்களை கஷ்டப்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் அடிவாரம் மற்றும் சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள்!
திருப்பதி கோவிலில் இன்று காலை 10 மணிக்கு மாதாந்திர ஆர்ஜித சேவா, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்!
பயணியர் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, தாம்பரத்தில் இருந்து இன்று காலை 8:05 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வினோத் காம்ப்ளி பிறந்தநாள்!
இந்திய முன்னாள் வீரரும், ஜாம்பவான் சச்சினின் நண்பருமான மகாராஷ்டிராவை சேர்ந்த வினோத் காம்ப்ளியின் 51வது பிறந்தநாள் இன்று.
தென்தமிழக மாவட்டங்களில் மழை!
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 607வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கிச்சன் கீர்த்தனா : சேமியா பக்கோடா
மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை: எடப்பாடி, டிடிவி வலியுறுத்தல்!