ஸ்ரீ சக்தி சங்கமத்தில் பிரதமர்! top 10 news today Tamil January 15 2023
கேரளா மாநிலம் திருச்சூரில் இன்று ‘ஸ்ரீ சக்தி சங்கமம்’ என்ற தலைப்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
சென்னை புத்தகக் காட்சி இனிதே ஆரம்பம்!
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ள 47-வது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஹிண்டன்பர்க் – அதானி வழக்கில் தீர்ப்பு!
அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
வெள்ள நிவாரண தொகை : கடைசி நாள்!
தென்மாவட்டங்களில் வெள்ள நிவாரண தொகையை பெற இன்று கடைசி நாள் என்பதால், டோக்கன் பெற்றவர்கள் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என 4 மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்கள் கூட்டம்!
டெல்லியில் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
சேலத்தில் அண்ணாமலை
என் மண், என் மக்கள் என்ற பெயரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் 4 நாட்கள் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அரையாண்டு தேர்வுகள் தொடக்கம்!
தென்காசி மாவட்டத்தில் கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு சவால்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் கடைசி டெஸ்ட்!
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டிகள் ஆரம்பம்!
சென்னை மைலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர் நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டிகள் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 592 ஆவது நாளாக விலை மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மொறு மொறு ஸ்வாலி
டிஜிட்டல் திண்ணை: மோடி வருகை- மூன்றாவது அணிக்கு அச்சாரமா? வேட்பாளர் தேர்வில் எடப்பாடி
top 10 news today Tamil January 15 2023