top 10 news today Tamil February 29 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

top 10 news today Tamil February 29 2024

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு!

தி.மு.க கூட்டணியில் உள்ள மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 29) நடைபெற உள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல்!

கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை முதல்வர் சித்தராமையாவிடம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

அகிலேஷ் யாதவ் ஆஜராக சம்மன்!

உத்திரப்பிரதேசத்தில் சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாகப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள், இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

FASTag – இன்று கடைசி நாள்!

வாகன ஓட்டிகள் தங்களுடைய FASTag கார்டுகளின் கேஒய்சியை புதுப்பிப்பதற்கு இன்றுடன் அவகாசம் நிறைவடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வடக்கன் ‘பர்ஸ்ட் லுக்’ ரிலீஸ்!

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

பெங்களூரு – டெல்லி அணிகள் மோதல்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இன்று இரவு 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது.

வெயில் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 649வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: தோசைக்காய்ச் சட்னி

ரீ ரிலீஸ் அலப்பறைகள்: அப்டேட் குமாரு

top 10 news today Tamil February 29 2024

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *