4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை! top 10 news today Tamil December 3 2023
மிசோரம் தவிர்த்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்குகள் இன்று (டிசம்பர் 3) எண்ணப்படுகின்றன.
8 மணி நேரத்தில் புயல்!
சென்னையில் இருந்து 330 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 8 மணி நேரத்தில் ’மிக்ஜாம்’ புயலாக உருமாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை!
மிக்ஜம் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தினம்!
உலகம் முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
142 ரயில்கள் ரத்து!
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் இன்று முதல் 7ஆம் தேதி வரை 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கட்டுமான பணிகளை நிறுத்துங்கள்!
வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் நிலவி வரும் நிலையில் இன்றும், நாளையும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தேர்வுகள் ரத்து!
கனமழை எச்சரிக்கையால் இன்றும், நாளையும் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மற்றும் தொலைதூர கல்வித் திட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
5 ரூபாயில் மெட்ரோ பயணம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு இன்று ரூ. 5 கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா கடைசி போட்டி!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 561வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைக்க நினைப்போர் குறைவாகச் சாப்பிட வேண்டுமா?
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் பணி!
top 10 news today Tamil December 3 2023