டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்!

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.

தவெக ஆலோசனைக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

வெயில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்று வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 639வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

விண்ணப்ப படிவங்கள் விநியோகம்!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் விநியோகம் செய்யப்படவுள்ளது.

காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சந்தேஷ்காளி வன்முறை விசாரணை!

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சந்தேஷ்காளி வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தனுஷ் 50 பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

தனுஷ் இயக்கி, நடிக்கவுள்ள ‘டி-50’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

’வணங்கான்’ ’பட’ டீசர் ரிலீஸ்!

அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

குஜராத் – ஜெய்ப்பூர் மோதல்!

10-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பியூட்டி டிப்ஸ்: முகத்தில் உள்ள ரோமங்கள்… வீட்டிலேயே நீக்க எளிய வழிகள்!

கிச்சன் கீர்த்தனா: வெள்ளை குருமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *