விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி!
பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இறுதிப்போட்டியில் இன்று (ஜூலை 16) செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸும் மோதவுள்ளனர்.
ஆறாத வடுவின் 19 ஆண்டுகள்!
கடந்த 2004-ம் ஆண்டு இதே நாளில் கும்பகோணம் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த 94 குழந்தைகளின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கோப் பஜாரின் கட்டணம் குறைப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வீடுகளுக்கே டெலிவரி செய்யும் கோப் பஜாரின் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் நடை திறப்பு!
ஆடி மாத பூஜைகாக இன்று மாலை 5 மணி அளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
உலக பாம்புகள் தினம்!
பாம்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் இன்று உலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வானதி எதிராக மய்யம் போராட்டம்!
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 421 ஆவது நாளாக இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவையில் மகிழ்ச்சி 23!
கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் ‘மகிழ்ச்சி 23’ கலைநிகழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி. கன்வென்ஷன் செண்டரில் இன்று மாலை 5:00 மணி முதல் நடைபெறுகிறது.
விவசாய கருத்தரங்கு!
கோவை ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் இன்று மாபெரும் விவசாய கருத்தரங்கை நடத்துகிறது.
இடி, மின்னலுடன் மழை!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிச்சன் கீர்த்தனா: தயிரா, மோரா… இந்த சீசனுக்கு ஏற்றது எது?
இது ஆரம்பம் தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெருமிதம்!