டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஜி20 மாநாட்டின் கடைசி நாள்!

ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டில் 2வது மற்றும் கடைசி நாள் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற உள்ளது.

சென்னை திரும்புகிறார் முதல்வர்!

ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத்தலைவர்  விருந்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10:05 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

3வது புவி சுற்றுப்பாதையில் ஆதித்யா!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3-வது முறை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்!

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

படப்பிடிப்புகள் ரத்து!

நடிகர் சங்க பேரவைக் கூட்டம் காரணமாக அனைத்து தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் இன்று ஒரு நாள் ரத்து செய்ப்படுவதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று மதியம் 3 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இலங்கையின் கொழும்புவில் மோதுகின்றன.

யு.எஸ். ஓபன் – இறுதிப்போட்டி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் – மெத்வதேவ் மோத உள்ளனர்.

வடிவேல் பாலாஜி நினைவு நாள்!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வடிவேலு போல நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் வடிவேல் பாலாஜியின் நினைவு நாள் இன்று.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 477வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

வானிலை அறிக்கை!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சண்டே ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யப்படும் பனீர் ஆரோக்கியமானதா?

பாரத்”தும் … ஆளுநரும் …. : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *