டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

டெல்லி அரசை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை தகுதி நீக்கம் செய்யக்கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர்.

குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி நாளை குமரிக்கு வருகை தருவதை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. இன்று தென் மண்டல ஐ.ஜி. ஆஸ்ராகர்க் ஆய்வு செய்ய உள்ளார்.

சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 6) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 108வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 463 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,71,030 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 483 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,28,004 ஆக உயர்ந்துள்ளது.

இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகப் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் பதவியேற்பு!

இங்கிலாந்து பிரதமருக்கான போட்டியில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட லிட் ட்ரஸ் வெற்றி பெற்றுள்ளார். இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று இங்கிலாந்து ராணியை சந்தித்த பின், பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் 60,399 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் ரஜினி!

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

விற்பனைக்கு வரும் வென்யூ என் லைன்!

ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ என் லைன் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது வழக்கமான வென்யூ காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. ஆகையால், இக்காருக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

வாழ்வா? சாவா ஆட்டத்தில் இந்தியா!

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா அணி தனது 2வது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பையில் இலங்கையை வென்றதில்லை என்ற வரலாறு உள்ளது. மேலும் இந்தியா இன்று கட்டாயம் வென்று வெற்றிக் கணக்கை தொடங்கினால் மட்டுமே பைனல் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் : புதுமை பெண் திட்ட விழாவில் கெஜ்ரிவால்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.